மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கசந்து போன காதல் திருமணம்.. புது மாப்பிள்ளை எடுத்த அதிர்ச்சி முடிவு!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சுனாமி குடியிருப்பு மீனவர் காலனி பகுதியை சேர்ந்தவர் குணசேகரனின் மகன் அருண். இவர் பூம்புகார் பகுதியை சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவரும் வேளாங்கண்ணிக்கு வந்து தனியார் விடுதியில் தங்கியுள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த அருண் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த வேளாங்கண்ணி போலீசார் அரணில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட அருண் மீது பூம்புகார் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.