மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதலிரவு முடிந்து மணமகன் எடுத்த விபரீத முடிவு.. கதறும் குடும்பத்தினர்.!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஓச்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் அன்றைய தினமே இருவரும் மறு வீட்டிற்க்காக தனது மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாலையில் ஸ்வேதா எழுந்து பார்த்தபோது தனது கணவன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கத்தி கூச்சலிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சரவணன் மனைவி ஸ்வேதா, மாமனார் மற்றும் மாமியார் ஆகிய மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.