மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை; மகிழ்ச்சியில் சென்னைவாசிகள்.!
மாதவரம்- சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம்- கோயம்பேடு இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முதலில் கோயம்பேடு ஆலந்தூர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு படிப்படியாக பல முக்கியமான நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்தத திட்டம் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனாலும் சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் இன்றளவும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் மெட்ரோ ரயில் சேவை இல்லாத பகுதிகளில் உள்ள மக்கள் தங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவை இருந்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்பார்த்த நிலையில்,
சென்னையில் மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் 2 ஆம் கட்ட பணிகளுக்காக ஜப்பான் இந்தியாவிற்கு 20 ஆயிரம் கோடிக்கு மேல் கடனாக அளிக்க முன்வந்துள்ளது. அதற்கான ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது.
இதனால் 2ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தின் கீழ் மாதவரம்- சோளிங்கநல்லூர் மற்றும் மாதவரம்- கோயம்பேடு இடையே புதிய வழித்தடங்கள் அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இதனால் இப்பகுதி சென்னை வாழ் மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.