மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை நகர வாகன ஓட்டிகளே! வந்துவிட்டது புதிய கட்டுப்பாடு... காவல்துறை ஆணையர் அறிவிப்பு.!
சென்னை நகரில் வாகன ஓட்டிகளுக்கு புதிய விதிமுறைகளை இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறார் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால். இதனால் வாகன ஓட்டிகள் முறையான வேகத்தை கடைபிடிக்கும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மாநகரங்களில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு காவல்துறையும் பல்வேறு கட்டுப்பாடுகளை வாகன ஓட்டிகளுக்கு விதித்து வருகிறது. என்னதான் காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்தாலும் வாகன ஓட்டிகளும் சாலையில் செல்பவர்களும் அவற்றை பின்பற்றாமல் செல்வதால் தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் வேகத்தால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்காக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார். அதன்படி பகல் நேரங்களில் 40 கிலோமீட்டர் வேகத்திலும் இரவு நேரங்களில் ஐம்பது கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த வேக கட்டுப்பாடை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வாகன ஓட்டிகளின் வேகத்தை கண்காணிப்பதற்காக தானியங்கி ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டு வருவதாகவும் அவற்றின் மூலம் தானியங்கி முறையில் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.