குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கட்டுன தாலியில் ஈரம் கூட காயல..!! இப்படி ஒரு சோகம் எந்த குடும்பத்துலையும் நடக்க கூடாது..
திருமணம் முடிந்த 4 நாட்களில் புதுமண தம்பதியினர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார். மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்துவந்துள்ளார். இந்நிலையில், இவருக்கும் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்துவரும் கார்த்திகா என்பவருக்கும் கடந்த 28-ந் தேதி திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்து மருவீட்டிற்காக கணவன் மனைவி இருவரும் காரில் பெருங்களத்தூர் சென்றுவிட்டு, அங்கிருந்து நேற்று நேற்று இரவு காரில் அரக்கோணத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் சென்றுகொண்டிருந்த கார் பூந்தமல்லி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் கூவம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர் திசையில் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி கலவை இயந்திரம் பொருத்தப்பட்டிருந்த லாரி அதிவேகமாக வந்தநிலையில், வளைவில் திரும்ப முயன்றுள்ளது. இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மனோஜ்குமார் - கார்த்திகா சென்றுகொண்டிருந்த கார் மீது கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் காரில் இருந்த புதுமண தம்பதியினர் உடல்நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியை அப்புறப்படுத்தி, காரில் இருந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்ட நிலையில் போலீசார் அவரை தேடி வருகின்றார். திருமணம் முடிந்து சில நாட்களிலையே புதுமண தம்பதி உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.