திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருமணமான 4 மாதத்தில் ஒரே கயிற்றில் சடலமாக தொங்கிய தம்பதி.! வெளியான அதிர்ச்சி காரணம்.!
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணி. 26 வயது நிரம்பிய இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் டிராக்டர் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். அதே சூளையில் வேலை செய்து சவிதா என்ற பெண்ணிற்கும், மணிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் சவிதா கருவுற்றிருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சவிதாவுக்கு கரு கலைந்துவிட்டது. இதனால் கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இருவரும் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் உள்ள மின்விசிறியில் ஒரே கயிற்றில் கணவன் மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்தநிலையில், நேற்று காலை மணி, வேலைக்கு வராததால் அவருடன் பணியாற்றும் ஊழியர்கள் அவரை தேடி அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது கணவன்- மனைவி இருவரும் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கரு கலைந்ததால் மன உளைச்சலில் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. காதலித்து திருமணம் செய்து 4 மாதத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.