மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலுக்கு எதிர்ப்பு.. திருமணம் செய்த காதல்ஜோடி தற்கொலை!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தானத்தம் அருகே அருகே உள்ள கருத்தக்கோடாங்கிபட்டியை சேர்ந்தவர்கள் பொன்னுசாமி சித்ரா தம்பதியினர். இவர்களின் மகள் ஸ்ரீநிதி அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மாணவி கடந்த பிப்ரவரி 6ம் தேதி முதல் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். மேலும், மாணவியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் செல்போன் மூலம் விசாரித்துள்ளனர்.
இதனிடையே மாணவியின் பெற்றோர் தனது பகல் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மனைவியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் பெண் ஒருவரும், இளைஞரும் தூக்கில் பிணமாக தொக்கி இப்படி கிடப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் மனைவி ஸ்ரீநிதி மற்றும் அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பது தெரியவந்தது.
இதில் அஜித் குமாரின் செல்போனில் ஸ்ரீநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மிஸ் யூ ஆல்.. போயிட்டு வரேன் என ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீநிதி கழுத்தில் தாலி இருந்துள்ளது. இதன் மூலம் ஸ்ரீ நிதியும், அஜித் குமாரும் காதலித்திருக்கலாம் எனவும் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து தான் இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.