மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
8 வருட காதல்! ஏற்றுக்கொள்ளாத பெற்றோர்! திருமணமாகி 7 நாட்களில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு!
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் என்பவரின் மகன் சந்தோஷ்குமார் என்பவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சந்தோஷ்குமார் திருமணமாகி கடந்த ஒரு வாரமாக மேற்கு மாம்பலம் பரோடா தெருவில் மனைவி மீனாவுடன் வசித்து வந்தார்.
சந்தோஷ் குமாரும் மீனாவும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த வாரம் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாடகை வீட்டில் குடியேறினர்.
மீனா சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்துவந்துள்ளார். இந்நிலையில், பெற்றோர் தன் காதல் திருமணத்தை ஏற்கவில்லையே என நினைத்து சந்தோஷ்குமார் சில நாட்களாக மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
இதற்கிடையில், தனது மனைவி கோயிலுக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த சந்தோஷ் குமார் மனவேதனையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு திரும்பிவந்த மனைவி, தனது காதல் கணவரை இழந்துவிட்டோமே என கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.