திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முன்னால் காதலனை மறக்க முடியாத புதுமணப்பெண்.! விரக்தியில் வாழ்க்கையை முடித்துக் கொண்ட மாப்பிள்ளை.!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசிக்கு அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும், சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், கடந்த 3 வாரங்களுக்கு முன்பு, பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் விமரிசையாக நடந்தது. புதுமணப்பெண் மற்றும் மணமகன் இருவருக்குள்ளும் அன்னியோன்யம் வெளிப்படவில்லை. மற்றும் மாப்பிள்ளை சோகமான முகத்துடனேயே காணப்பட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த மாப்பிள்ளையின் தாயார், இது குறித்து அவரிடம் கேட்டார். அப்போது அந்த இளைஞர், அந்த புதுமண பெண் திருமணத்திற்கு முன்பு வேறு ஒரு இளைஞருடன் காதல் வயப்பட்டதாகவும், இப்போதும் அந்த காதலனை மறக்க முடியாமல் தவிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அந்தப் பெண்ணுடன் தான் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்றும் மிகுந்த சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த இளைஞரின் தாய், சிறிது நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக கூறி ஆறுதல்படுத்தியுள்ளார். சம்பவம் நடந்த அன்று, அந்த இளைஞர் படுக்கை அறையில் இருந்து வெகு நேரம் வெளியே வராமல் இருந்துள்ளார். சத்தமிட்டும் அவரிடமிருந்து எந்த பதிலும் வராததால் ஜன்னல் வழியாக பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த அறையில் இருந்த மின்விசிறியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கதறி துடித்த அந்த இளைஞரின் தாயார், அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த இளைஞர் முன்பே இறந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இது குறித்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் அந்த இளைஞரின் தாய் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.