மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிலருக்கு சாதகம் பலருக்கு பாதகம்; வெளியான புதிய வானிலை அறிவிப்பு; அப்போ சென்னையின் நிலை..?
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலின் கொடுமையில் சிக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். கத்திரி வெயில் காலம் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாகவே முடிந்த நிலையில் இன்னும் வெயில் குறைந்த பாடில்லை.
அடிக்கடி வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் உருவாகும் பானி புயல், வாயு புயல் போன்ற புயல்களும் திசைமாறி வெளிமாநிலங்களுக்கு நல்ல மழை பொழிவை தந்து கொண்டிருக்கிறது. இதனால் தமிழக மக்கள் நல்ல மழை பொலிவிற்காக தவம் கிடக்கிறார்கள். இவ்வாண்டு தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவக்காற்று மழையும் கேரளாவிற்கு நல்ல மழை பொழிவை தந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று கூறுகையில்; தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் மேல் பதிவானது. அடுத்த சில தினங்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி ஆகிய 13 மாவட்டங்களில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும்.
மதுரை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி, ராமநாதபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.
அதேநேரம் தென்மேற்குப் பருவமழை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 18) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.