மக்களே உஷார்! அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையின் நிலை என்னவாகும்; வானிலை ஆய்வு மையம் தகவல்.!



next-24-hours-hot-climate---chennai---refriginater-tami

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலின் கொடுமையில் சிக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். கத்திரி வெயில் காலம் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாகவே முடிந்த நிலையில் இன்னும் வெயில் குறைந்த பாடில்லை.

அடிக்கடி வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் உருவாகும் பானி புயல், வாயு புயல் போன்ற புயல்களும் திசைமாறி வெளிமாநிலங்களுக்கு நல்ல மழை பொழிவை தந்து கொண்டிருக்கிறது. இதனால் தமிழக மக்கள் நல்ல மழை பொலிவிற்காக தவம் கிடக்கிறார்கள். இவ்வாண்டு தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவக்காற்று மழையும்  கேரளாவிற்கு நல்ல மழை பொழிவை தந்து கொண்டிருக்கிறது.

chennai

இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழகத்தின் சில பகுதிகளில் அவ்வப்போது மழைப்பொழிவு காணப்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில்: அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.