திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: அடுத்த 3 மணிநேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.!
வங்கக்கடல் பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற நிலையில், அது புயலாக மாறி 8 ஆம் தேதி புதுச்சேரி - ஆந்திரா இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மழைக்கான வாய்ப்புகள் இல்லை என்றாலும், மாநில அளவில் ஆங்காங்கே லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நெல்லை மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.