சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம் இதுதான்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!!
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஏழு நாட்களுக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.
இதனால் 30-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் லேசான பனிமூட்டமும் காணப்படும்.
31-ம் தேதியை பொருத்தமட்டில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யலாம். அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும்.
1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். தலைநகர் சென்னையை பொருத்தமட்டில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையாக குமரிக்கடல், அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு 30-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இப்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம். இப்பகுதிகளில் காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.