மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுப்பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலி மதுபாட்டில்களை கொடுத்தால் இவ்வளவு பணமா?..!
காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்தால், கூடுதலாக 10 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் போன்ற மலைப்பிரதேசங்களில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்குபவர்கள், பாட்டில்களை வனப்பகுதி மற்றும் சாலையில் வீசி செய்கின்றனர். இதனால் வன விலங்குகளுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மாவட்டத்தின் 15 இடங்களில் காலி மது பாட்டில்களை சேகரிப்பதற்காக சேகரிப்பு மையம் தொடங்கப்பட்டு இருக்கிறது.மேலும், இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை கொடுப்பதன் மூலம் 'கூடுதலாக 10 ரூபாய் தரப்படும் என்று ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், "காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுப்பதன் மூலமாக கூடுதலாக செலுத்திய 10 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும், மது குடிப்போர் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.