#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இமயமலை அடிவாரம் போல, ஊட்டியில் உறைபனி.. வெள்ளை போர்வையை விடுவித்த இயற்கை.!
நீலகிரி மாவட்டத்தில் அக். மாத இறுதியில் பனிக்காலம் தொடங்கி, நவம்பர் மாதம் உறைபனி சீசன் வரும். நவம்பர் முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரையில் இதன் தாக்கம் இருக்கும். நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலத்தில், அங்குள்ள வெப்பநிலை பூஜ்ய நிலையிலும் இருக்கும். சில நேரத்தில் மைனஸ் வரை செல்லும்.
உறைபனியின் காரணமாக புல்வெளிகள், தேயிலை தோட்டங்கள், மலையில் உள்ள காய்கறிகள் போன்றவை கருகும். நடப்பு வருடத்தில் நீடித்த வடகிழக்கு பருவமழை மற்றும் பருவம் தவறி பெய்த மழையினால் உறைபனி சீசன் தாமதம் ஆனது. இதனால் டிசம்பர் மத்தியில் பனிப்பொழிவு தொடங்கி அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் பனியின் தாக்கம் குறைந்து இருந்த நிலையில், நேற்று மற்றும் இன்று அதிகாலை நேரத்தில் கடுமையான உறைபனி பொழிவு ஏற்பட்டது. இன்று வெப்பநிலை 5 டிகிரி செல்சியசாக பதிவானது.
ஊட்டியில் இருக்கும் தாவரவியல் பூங்கா, குதிரை மைதானம், படகு இல்லம் போன்ற பகுதியில் வெள்ளைக்கம்பளம் விரித்தார் போல புல்வெளிகள் இருந்தன. சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த கார், ஆட்டோ போன்ற வாகனமும் உறைபனியால் போர்த்தப்பட்டது.