திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காருக்குள் தலைமை காவலரின் சடலம்; மர்ம மரணத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சி.!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, பாம்பே கேசில் பகுதியில் வசித்து வருபவர் சசிகுமார் (வயது 44). இவர் ஊட்டி லவ்டேல் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார்.
சசிகுமாரின் மனைவி சபிதா (வயது 34). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள சிறுமுகை, வீராசாமி நகரில் செயல்பட்டு வரும் பள்ளியில் சபிதா ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று சசிகுமார் தனக்கு சொந்தமான காரில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இரவு நேரத்தில் சிறுமுகை வெள்ளிக்குப்பம் பாளையம் பகுதியில் செயல்படும் பெட்ரோல் பல்கில் காரில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.