திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
8 வயது சிறுமி பலாத்காரம்: 2வது முறையும் போக்ஸோவில் கைதான காமக்கொடூரன்.. நீலகிரியில் அதிர்ச்சி.!
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி, தலைக்குந்தா பகுதியில் வசித்து வரும் நபர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் எட்டு வயது மகள் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி அப்பகுதியில் இருக்கும் கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு வந்துள்ளார். அப்போது, அப்பகுதியை சார்ந்த அஜித்குமார் என்ற 23 வயதுடைய இளைஞர், சிறுமியை அவரின் தாத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள பகுதிகளில் தேடி இருக்கின்றனர். அச்சமயம் சிறுமி பலத்த காயத்துடன் காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டார். இதனையடுத்து அவரை உடனடியாக ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
என்ன நடந்தது என விசாரித்த போது, அஜித்குமாரின் அதிர்ச்சி செயல் அம்பலமானது. இதனைக்கேட்டு ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற பெற்றோர், தங்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை கேட்டு கொதித்துப்போனவர்கள், எந்தவிதமான குற்ற குற்ற உணர்ச்சியும் இன்றி சாலையில் திரிந்த அஜித் குமாரை பிடித்து அடித்து நொறுக்கினர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அஜித்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். மேலும், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அஜித்தை சிறையில் அடைத்தனர்.
இவன் ஏற்கனவே வேறொரு கிராமத்தை சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்து போக்ஸோவில் கைதாகி சிறைக்கு சென்று இருக்கிறான். ஜாமினில் வெளியே வந்த கயவன் மீண்டும் அக்குற்றத்தை அரங்கேற்றி சிறைக்கு சென்றுள்ளான்.