நிவர் புயல் தீவிரப் புயலாக கரையைக் கடக்க வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!



nivar strom in tamilnadu

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றுமுன்தினம்  உருவானது. வங்கக்கடலில் புதுச்சேரிக்கு அருகே 600 கி.மீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. பின்னர் அது புயலாக மாறி வருகிற 25-ந்தேதி தமிழகத்தை தாக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 24 ஆம் தேதி மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு, ‘நிவர்’ என்று பெயரிடப்பட உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

nivar strom

இந்த புயலால் நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழை வரை பெய்யக்கூடும். இன்று இரவு முதலே மழை தொடங்க வாய்ப்புள்ளது. நாளையும் நாளை மறுநாளும் கனமழை முதல் மிக கனமழை வரை எதிர்பார்க்கலாம். நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும். அதன்பிறகு தீவிரப் புயலாக மாறி கரையை கடக்கும் பட்சத்தில், 89 முதல் 117 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.