வருகிறது "நிவர் புயல்".. ! எந்த எந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தெரியுமா.?



nivar strome

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அது புயலாக மாறி வருகிற 25-ந்தேதி தமிழகத்தை தாக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 24 ஆம் தேதி மிக கனமழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு, ‘நிவர்’ என்று பெயரிடப்பட உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

strome

மேலும் வரும் 25 ஆம் தேதி மாமல்லபுரம்-காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் தினத்தன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் வருகிற 24, 25ம் தேதிகளில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று முதல் 25-ம் தேதி வரை மீனவர்கள் வங்கக் கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.