தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.!



No dismissal on retirement day

தமிழக சட்டமன்றத்தில் கடந்த மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில்,ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்கள் தற்காலிக பணியிடை நீக்கத்தில் வைக்கும் நடைமுறை நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதற்க்கு முன்னதாக ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்வதால், அவர்களுக்கான சலுகைகள் அனைத்தும் கிடைக்காமல் போய்விடுகிறது என கூறி மாநில அரசின் செயல்பாட்டை கண்டித்து தமிழக அரசு ஊழியர் சங்கங்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 இதனை தவிர்க்கும் வகையில் தான் தமிழக முதல்வர் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆணையில், குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அரசு ஊழியர்கள் மீதான விசாரணை மற்றும் நடவடிக்கைகளை அவர்கள் ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே முடிக்கப்பட வேண்டும். 

இதற்கான வேலைகளை ஒழுங்கு நடவடிக்கைகள் குழு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதுபோன்ற சமயங்களில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு அனுமதித்து, அதன்பிறகு தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வழிவகை செய்து தரப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.