திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போதையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமி தியேட்டர் அருகே போதையில் இருந்த வட மாநில இளைஞர் ஒருவர் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்துதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த பெண் ஒருவர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் ஒன்று கூடி மது வகையிலிருந்து வட மாநில இளைஞரை அடித்து, உதைத்து கம்பத்தில் கட்டி வைத்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி காவல் நிலைய போலீசார் வடமாநில இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதில் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் பீகாரை சேர்ந்த பாஸ்வான் என்பது தெரிய வந்தது.