மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடியோ: ஏடிஎம் இயந்திரத்தின் உள்ளே திருடன் சிக்கிய காட்சிகள்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ!!
ஏடிஎம் இயந்திரத்தின் பின்புறம் ஓட்டையிட்டு உடைத்து உள்ளே இருந்த பணத்தை திருட முயன்ற வடமாநில இளைஞர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டார்.
வடமாநிலத்தை சேர்ந்த உபேந்திரா என்ற இளைஞர், நாமக்கல் அருகே உள்ள அனியாபுரத்தில் இருக்கும் ஏடிஎம் இயந்திரத்தில் பின்புறம் ஓட்டையிட்டு உடைத்து உள்ளே இருந்த பணத்தை திருட முயன்ற போது, அந்த இளைஞர் ஏடிஎம் இயந்திரத்தில் சிக்கிக் கொண்டார். இதைக் கண்ட போலீசார் அந்த வட மாநில இளைஞரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் அந்த இளைஞர் சிக்கிக்கொண்ட வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.