தமிழக மக்களை மகிழ்விக்க வரும் வடகிழக்கு பருவமழை! எப்போது ஆரம்பமாகிறது தெரியுமா?



Northeast Monsoon


வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்திற்கு அதிக மழைப் பொழிவைத் தரும், வடகிழக்கு பருவமழை தொடங்கவிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவக் காற்று முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் 17ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

rain

இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் பரவலாக  மழை பெய்யக்கூடும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.