#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வீட்டைவிட்டு வெளியில் போறீங்களா.?! உஷார்.. 6 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.!
இன்று தமிழகத்தின் சில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை இடி, மின்னலுடன் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை புறநகர் பகுதிகளிலும், சென்னையிலும் 24 மணி நேரத்திற்கு வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.