திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆட்சியில் நீங்க., காரணம் நாங்களா?.. செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமனடைந்த சீமான்.. பரபரப்பு பேட்டி.!
சாதிய வன்ம கொலை நடந்தால் தமிழ் தேசியம் பேசியவன் எங்கே என கேட்கிறார்கள். ஆட்சியில் நீங்க உள்ளீர்கள் என சீமான் பரபரப்பாக பேசினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்திக்கையில், "அதானி துறைமுகத்தில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு ஹெராயின் வந்தது குறித்து யாரும் பேசவில்லை. போதைப்பொருள் கடத்தலை கண்காணிக்காமல் என்ன வேலை செய்தீர்கள்?.
ஆட்சி நடப்பது திராவிடர் ஆட்சி. போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ் தேசியவாதிகள் பக்கம் திருப்பினால் எப்படி?. நான் சவுக்கு சங்கரின் கருத்தை எப்போதும் ஏற்பது இல்லை. ஆட்சியில் இருந்து யார் என்ன பேசுனாலும் ஒட்டுக்கேட்கிறார்கள். கடத்தலின் போது என்ன செய்தார்கள்?.
சாதிய வன்ம கொலை நடந்தால் தமிழ் தேசியம் பேசியவன் எங்கே என கேட்கிறார்கள். ஆட்சியில் நீங்க உள்ளீர்கள். ஆனால், இது திராவிட மாடல் ஆட்சி என விளம்பரம் செய்கிறார்கள். அண்ணா மண், பெரியார் மண் என கூறுகிறார்கள்" என்று பேசினார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது சீமானுக்கும் - செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.