மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணை மறைத்த காதல்.. கருக்கலைப்பு செய்த 17 வயது நர்சிங் மாணவி பலி!
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி காந்தி கிராமத்தில் உள்ள ஒரு கல்லூரி விடுதியில் தங்கிய நர்சிங் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி உறவினர் ஒருவரை பார்க்க சென்றபோது அவரது உடலில் மாற்றங்கள் இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின் உறவினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி உறவினர் விசாரித்ததில் திண்டுக்கல்லை சேர்ந்த ராம்குமார் என்பவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.
மேலும் கல்லூரி விடுமுறையின் போது அவரது அண்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்னுடன் உல்லாசமாக இருந்ததாகவும், அதனால் தான் கர்ப்பமானதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்த உறவினர், மாணவியை திருச்சி உறையூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கே அவருக்கு கருக்கலைப்பு செய்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து மனைவியின் சகோதரி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இது குறித்து காதலன் ராம்குமார், மாணவியின் உறவினர் மற்றும் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த டாக்டர் ஆகிய 3 மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.