மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் வட மாநில பெண்... கூட்டு பாலியல் வன்புணர்வு... சிறுவன் உட்பட 4 பேர் அதிரடி கைது.!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒடிசாவை சேர்ந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடி பகுதியைச் சேர்ந்த அக்னி பாண்டி என்பவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது செங்கல் சூலையில் மானாமதுரை, கீழமேல்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்களும் வட இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இவரது செங்கல் சூலையில் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த பெண் 7 வருடங்களாக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இரண்டு குழந்தைகளும் மூங்கில் ஊரணி என்ற ஊரில் உள்ள ஆதரவற்றோர் பள்ளியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா பெண்ணிற்கும் அங்கு தங்கி பணியாற்றி வந்த ஆதி என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கீழமேல்குடி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (22), ரஞ்சித் (21), கஜேந்திரன் (19) மற்றும் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் சேர்ந்து கஞ்சா போதையில் தனியாக இருந்த ஒடிசா பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது காதலன் ஆதி மற்றும் சிறுவன் உட்பட ஐந்து பேரை காவல்துறை கைது செய்து இருக்கிறது.