திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஐயோ போச்சே...! செப்டிக் டேங்கில் தவறி விழுந்த சிறுவன்.. பரிதாபமாக பலியான சம்பவம்.. கதறும் பெற்றோர்..!
செங்கல்பட்டு மாவட்டம் சாஸ்திரிப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் லாரி டிரைவரான மணிகண்டன். இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் தனது 6 வயது மகன் பிரதீப்பை அழைத்து கொண்டு வீட்டிற்கு தண்ணீர் எடுப்பதற்காக வெங்கடாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள குடிநீர் குழாய் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது மணிகண்டன் குழாயில் தண்ணீர் பிடித்து விட்டு வந்து பார்த்தபோது அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவரது மகன் பிரதீப் அங்கு இல்லாததை கண்டு மணிகண்டன் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அருகில் மூடப்படாமல் இருந்த செப்டிக் டேங்கை சென்று பார்த்த போது பிரதீப் அதில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.
இதனால் பதறிப்போன மணிகண்டன் அங்கிருந்தவர்கள் உதவியுடன் செப்டிக் டேங்கில் இருந்து குழந்தையை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.