ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அட இங்க பாருங்கடா... கேக் வெட்டி அசத்திய நாய்... குடும்பத்துடன் கோலாகலம்..!
திருச்சியில் வசித்து வரும் தம்பதியினர் தாங்கள் செல்லமாக வளர்த்து வந்த நாய்க்குட்டிக்கு ஒரு வயது நிறைவடைந்த நிலையில் நாய்க்குட்டியின் பிறந்த நாள் விழாவை கொண்டாடி சிறப்பித்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் தென்னூர் காமராஜ் நகரில் வசிப்பவர்கள் முருகன் - வள்ளி தம்பதியினர். இவர்கள் செல்லப்பிராணியாக 2 நாய்க்குட்டிகளை தங்கள் பிள்ளைகள் போல் வளர்த்து வந்தனர். மேலும் அந்த நாய் குட்டிகளுக்கு ஹிட்டு, சார்வி என பெயரிட்டு குடும்பத்தில் ஒருவராக பாசத்துடன் வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நாய் குட்டிகளுக்கு 1 வயது நிறைவடைந்ததையொட்டி முருகன் குடும்பத்தினர் அந்த செல்லப்பிராணிகளுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடி சிறப்பித்துள்ளனர். மேலும் செல்லப் பிராணிகளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்திவுள்ளது.