மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே..! திருமணமாகி ஒரே மாதம்.. புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்.. கதறும் குடும்பத்தினர்..!
திருவள்ளூர் மாவட்டம் கம்மவார் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் தேவராஜ். இவருக்கு பிரேம்குமார் என்ற மகன் உள்ளார். இவர் டாஸ்மாக் மதுபான பாரில் உள்ள காலி பாட்டில்களை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான அஜித் குமார் என்பவரது இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு தனது மற்றொரு நண்பரான விஜயகுமார் என்பவருடன் பிரேம்குமார் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர்கள் திருவள்ளூர் ரயில்வே மேம்பாலத்தின் மீது செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி மேம்பாலத்தின் நடுவில் இருந்த உயர் மின்விளக்கு கோபுரத்தின் மீது அதிபயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் அவரது நண்பரான விஜயகுமார் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரேம்குமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த பிரேம்குமாருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணமாகி ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.