மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே! மாடி படியில் மயங்கி விழுந்த செவிலியர்.. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு பாலசுப்பிரமணியன் கோயில் தெருவில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு ப்ரீத்தி என்ற மகள் ஒருவர் உள்ளார். இவர் பி.எஸ்.சி நர்சிங் முடித்துவிட்டு நாமக்கல் அருகே நல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகுதிநேர செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இதற்காக பிரீத்தி ஆரம்ப சுகாதார நிலையைம் அருகே உள்ள ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து தனியாக தங்கி வந்துள்ளார். இந்நிலையில் ப்ரீத்திக்கு சில நாட்களாகவே ரத்த அழுத்தம் காரணமாக உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து நேற்று அதிகாலை வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக ப்ரீத்தி மாடி படிக்கட்டில் இருந்து இறங்கி வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு நிலை தடுமாறி மாடிப்படியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் ப்ரீத்திக்கு பலத்த காயம் ஏற்படவே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் ப்ரீத்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக பிரீத்தீயின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் செவிலியர் ப்ரீத்தி இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.