திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடக்கடவுளே!! கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு.. சேலத்தில் சோகம்..!
சேலம் மாவட்டம் கீரிப்பட்டி பேரூராட்சி கீழ்கொம்பை பகுதியில் வசித்து வருபவர்கள் தியாகராஜன் - சித்ரா தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் சீனிவாசன் என்று மகன் உள்ளார். தியாகராஜன் மற்றும் அவரது மனைவி சித்ரா இருவரும் அதே பகுதியை சேர்ந்த கருப்பன் என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம் அறுவடைப்பணியில் தொழிலாளர்களாக ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இவர்களோடு மகன் சீனிவாசனும் அந்த தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சீனிவாசன் யாரும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்கவே தியாகராஜன் மற்றும் தோட்டத்தில் வேலை செய்தவர்கள் கிணற்றில் குதித்து சிறுவனை தேடி உள்ளனர். ஆனால் சிறுவன் கிடைக்காத நிலையில் காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து சிறிது நேர தேடலுக்கு பின் சிறுவன் சீனிவாசன் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.