8 வருஷ உழைப்பு.. ஒரு போன் கால்; மொத்த பணமும் காலி.! கண்ணீர் விட்டு கதறிய பிக்பாஸ் போட்டியாளர்!
அட இந்த பூ அக்டோபர் மாதம் மட்டும் தான் பூக்கும்மா..??
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள கொடைக்கானல் அனைவரும் விரும்பும் சுற்றுலா தலங்களில் முக்கியமானதாகும். சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் கொடைகானல் 'மலைகளின் இளவரசி' என்று சொல்லப்படுகிறது.
மேலும் கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி என
கொடைக்கானலில் பல சுற்றுலா தளங்கள் உள்ளது.
இந்நிலையில் கொடைக்கானலுக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக ஜெர்ரி பூக்கள் பூக்க தொடங்கியுள்ளது. இந்த பூக்கள் வருடத்திற்கு ஒரு முறை அதுவும் அக்டோபர் மாதம் மட்டும் தான் பூக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பூக்கள் முதலில் வெள்ளை நிறமாக பூக்க தொடங்கி அதனை தொடர்ந்து இளஞ்சிவப்பு பின் ஜெர்ரி நிறத்தில் மாறி காட்சி அளிக்கும்.
மேலும் ஜெர்ரி பூக்கள் ஜப்பானில் தான் அதிகம் பார்க்க முடியும் என்பதால் ஜெர்ரி பூக்களை ஜப்பான் பூக்கள் என்றும் சொல்வார்கள். இந்நிலையில் இப்போது பெய்து வரும் சாரல் மழையில் கொடைக்கானல் மலை பகுதியில் காணப்படும் இந்த இளஞ்சிவப்பு ஜெர்ரி பூக்கள் கண்போரை பிரமிக்க வைக்கிறது.
மேலும் பயணிகள் அதிகமாக விரும்பி செல்லும் சுற்றுலா தளமான ஏரி சாலை, பிரையண்ட் பூங்கா, அப்பர் லேக், லாஸ்காட் சாலை ஆகிய இடங்களில் இந்த ஜெர்ரி பூக்கள் பூக்க தொடங்கியுள்ளது. பெரும்பாலும் மலர் கண்காட்சிகளில் செடிகளில் பூக்கும் பூக்களை பார்த்த மக்கள் இப்போது சற்று வித்தியாசமாக மரத்தில் பூக்கும் ஜெர்ரி பூக்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.