மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தண்ணீர் என நினைத்து டிஸ்டில்ட் தண்ணீரை குடித்த மூதாட்டி... காவலர் செய்த நெகிழ்ச்சி செயல்... குவியும் பாராட்டு!!
கோவை பந்தைய சாலை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிபவர் ஸ்ரீதர். இவர் கோவை -திருச்சி சாலையில் உள்ள புதிய மேம்பாலத்தின் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மேம்பாலத்தின் கீழே ஆதரவற்ற மூதாட்டி படுத்து கிடப்பதை கவனித்துள்ளார்.
அதனையடுத்து அருகில் சென்று மூதாட்டியை எழுப்பியுள்ளார். அப்போது மூதாட்டி அசைவின்றி கிடந்துள்ளார். அந்த மூதாட்டியின் அருகில் வாகன பேட்டரிகளுக்கு ஊற்றுக்கூடிய டிஸ்டில்ட் வாட்டர் காலி பாட்டில் கிடந்துள்ளது.
அதன்மூலம் தண்ணீர் என நினைத்து மூதாட்டி டிஸ்டில்ட் தண்ணீரை குடித்துள்ளது தெரிய வந்துள்ளது. அதனையடுத்து அந்த காவலர் மூதாட்டியின் முகத்தில் தண்ணீரை தெளித்து மயக்கத்தை தெளிய வைத்து விட்டு அவருக்கு முதலுதவி செய்துள்ளார்.
பின்னர் அந்த மூதாட்டியை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மயங்கி கிடந்த மூதாட்டியை தக்க சமயத்தில் உதவிய காவலரின் நெகிழ்ச்சி செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.