திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
சென்னை எம்.கே.பி நகரை சேர்ந்த தம்பதியினரின் ஐந்து வயது சிறுமிக்கு வியாசர் பாடியை சேர்ந்த 58 வயதான வேலாயுதம் என்ற முதியவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இதனையடுத்து வேலாயுதத்தை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், முதியவர் வேலாயுதத்தின் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.6000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.