திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய முதியவர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒழுகரை கிராமத்தை சேர்ந்தவர் 58 வயதான முதியவர் குணசேகரன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமி அடக்கு நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் வெளியில் சொல்லவில்லை. இதனை பயன்படுத்திக் கொண்ட குணசேகரன் சிறுமியை அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமி கர்ப்பமானதால் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் குணசேகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
இந்த வழக்கை விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் குற்றவாளி குணசேகரனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.57,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.