மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் ஒரு உயிரை பறித்த ஆன்லைன் ரம்மி... தடை செய்ய நடவடிக்கை எடுக்குமா அரசு..!!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாட்சி அருகே இளைஞர் ஒருவர் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணத்தை இழந்ததால், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சல்மான் (22). இவர் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகி வருகிறார். இவர் செல்போனில் ஆன்லைன் மூலம் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். அதில் தன்னிடம் இருந்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். இதையடுத்து நண்பர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். அதில் மொத்த பணத்தையும் இழந்ததால், விரக்தியில் இருந்த சல்மான் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் சல்மான் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ச்சியான ஆன்லைன் சூதாட்ட மரணங்கள், வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்று கடந்த வருடம் சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இந்த ஓரு வருடத்தில் ஆண், பெண் உட்பட 35 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.