மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களே உஷார்... உடனடி கடன் தருவதாக கூறி இளம்பெண்ணின் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று மோசடி... சென்னையில் பரபரப்பு...
சென்னை மாதனாங்குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு நாள் அந்த பெண்ணின் தொலைபேசி நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் உடனடி லோன் தருவதாக கூறி பேசியுள்ளார்.
அந்த நேரத்தில் அந்த பெண்ணுக்கு பண தேவை இருந்ததை அடுத்து அந்த நபரிடம் தனக்கு 30 ஆயிரம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். அதனையடுத்து அந்த நபர் அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.தொடர்ந்து அந்த பெண்ணை தொடர்பு கொண்ட அந்த நபர் கடன் தொகை தயாராகி விட்டதாகவும், அதற்கு முன்னதாக 3 ஆயிரம் முன்பணமாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே அவரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அவரின் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் அதிக அளவிலான வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.