திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கன மழையால் சாலையோர பள்ளத்தில் போலீஸ்காரர் ஒருவர் விழுந்து உயிரிழப்பு...
ராணிப்பேட்டை நெமிலி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ(29). இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் பணி முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.
அப்போது கல்பாலம்பட்டு ஏரி அருகே சாலை விரிவாக்கத்திற்காக தோண்டப்பட்டிருந்த குழியை கவனிக்காமல் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்துள்ளார். அதில் பலத்த காயமடைந்து மயங்கியதை அடுத்து தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மறுநாள் காலை அவ்வழியாக சென்ற பொது மக்கள் போலீசார் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளங்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.