மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெங்காய விலை கிடுகிடுவென உயர்வு! மேலும் விலை உயர வாய்ப்பு!
வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதால் வெங்காயம் விலை கிலோ 100ஐ தொட உள்ளது. பொங்கல் வரை விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழையின் காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் வெங்காயத்தின் வரத்து மீண்டும் குறைந்துள்ளதால் அதன் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 60 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 100 ரூபாய்க்கும் விற்பனையாவதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.
சில சில்லறை விற்பனை கடைகளில் வெங்காயம் கிலோ 95 முதல் 130 வரை விற்கப்படுகிறது. இந்தாண்டு இறுதி வரை வெங்காயம் விலை உச்சத்தில் தான் இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு புதிய வரத்து வெங்காயம் வந்த பிறகு தான் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.