அதிமுகவினருக்கு அதிகாலையில் காத்திருந்த பேரதிர்ச்சி.! ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.பாலமுருகன் காலமானார்..!



ops brother passed away


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் காலமானார்.

முன்னாள் துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து,சிகிச்சை பெற்று ஓ.பாலமுருகன் நேற்று இரவு பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார்.

இந்நிலையில், திடீரென்று இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தம்பியின் குடும்பத்தினருக்கு அதிமுக மற்றும் அனைத்து கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.