திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஓ.பி.எஸ் அணிவகுப்பு கார் மோதி காவலர் படுகாயம்.. நடுரோட்டில் பரபரப்பு சம்பவம்.!
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி இன்று சிறப்பிக்கப்படுகிறது. இதனால் இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உட்பட பல மாவட்டங்களில் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பசும்பொன்னுக்கு செல்லும் முக்கிய சாலைகள் அனைத்திலும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று ஓ.பன்னீர் செல்வம் பசும்பொன்னுக்கு நேரில் சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது, அவருடன் அணிவகுப்பு வாகனங்களும் பயணம் செய்தன. இவர்களின் கார் அங்குள்ள பார்தீபனூர் அருகே சென்ற சமயத்தில், சாலையோர தடுப்பு மீது அணிவகுப்பில் இருந்த கார் மோதியுள்ளது. இந்த விபத்தில், சாலையோர இரும்பு தடுப்புக்கு அருகே இருந்த காவலர் படுகாயமடைந்தார்.
அவரை மீட்ட அதிகாரிகள் உனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரும் சேதமடைந்து இருந்ததால் அது சாலையோரம் அப்புறப்படுத்தப்பட்டது.