மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பொண்ணுங்க மேலே கைவைச்சா செத்துருவோம் னு பயப்படணும்" - தெறிக்கவிடும் யாஷிகா ஆனந்தின் 'படிக்காத பக்கங்கள்' டிரைலர்; லிங்க் இதோ.!
செல்வம் மாத்தப்பன் இயக்கத்தில், யாஷிகா ஆனந்த் (Yashika Anand), பிரஜின், ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் படிக்காத பக்கங்கள் (Padikkatha Pakkangal).
ஸ்மோவிபார்க் மற்றும் பௌர்ணமி பிக்சர்ஸ் தயாரித்து வழங்கியுள்ள இப்படத்திற்கு, ஜாஸ்ஸி கிப்ட் இசையமைத்து இருக்கிறார். பெண்களை திட்டமிட்டு சீரழிக்கும் கும்பலும், அதனை எதிர்த்து போராடும் நாயகி சந்திக்கும் சவாலும் தொடர்பான கதையம்சத்தில் படம் உருவாகி இருக்கிறது.
இப்படத்தின் இரத்தம் தெறிக்கும் டிரைலர் இன்று படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. வேட்டையாட வேண்டும் என்றால் காத்திருக்கும், பெண்களை கடத்தி கற்பழித்து கொலை செய்யும் கும்பலின் பின்னணி, பொண்ணுங்க மேலே கைவைச்சா செத்துருவோம் னு பயப்படணும் என்ற வசனங்கள் முக்கிய திருப்பத்தை படத்திற்கு அளிப்பதாக டிரைலரில் அமைந்துள்ளன.