கணவன் - மனைவி பிரச்சனையில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை.. தாய் வீட்டில் நடந்த பரிதாபம்..!!



painter suicide for family problem

 

சென்னையில் உள்ள கொடுங்கையூர் விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 48). இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். பாலாஜியின் மனைவி அம்சவல்லி. தம்பதிகளுக்கு 15 வயதுடைய மகனும், 13 வயதுடைய மகளும் இருக்கின்றனர். இவரின் மகளுக்கு சிறுவயதிலிருந்து உடல்நலகுறைவு ஏற்பட்டு நடக்க முடியாமல் இருந்துள்ளார்.

இவர்களுடன் 104 வயதாகும் பாலாஜியின் பாட்டி விசாலாட்சி என்பவரும் வசித்து வருகிறார்.  மதுப்பழக்கத்துக்கு அடிமையான பாலாஜி, உடல்நலக்குறைவான மகளையும், பாட்டியையும் பராமரிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் பாட்டியை பிற பேரப்பிள்ளைகள் வீட்டில் சில நாட்கள் தங்கிவருமாறு அம்சவல்லி கூறியுள்ளார்.

chennai

இந்த விஷயம் தொடர்பாக கணவன், மனைவியிடையே தகராறு ஏற்படவே, மனமுடைந்துபோன பாலாஜி தனது மனைவியிடம் கோபித்துக்கொண்டு விசாலாட்சியின் சொந்தமான வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு புடவையால் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இரண்டு நாட்களாகியும் கணவர் வீட்டுக்கு வராததால் பல இடங்களில் தேடியலைந்த மனைவி அம்சவல்லி என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கியுள்ளார்.

இதற்கிடையில் விசாலாட்சியின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த கொடுங்கையூர் காவல்துறையினர் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றபோது, உண்மை அம்பலமாகியது. அத்துடன் பாலாஜியின் உடலை மீட்ட அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.