அரசுப் பள்ளியில் பரபரப்பு: ஊட்டச் சத்து மாத்திரையால் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்!. குலுங்கும் அரசு மருத்துவமனை..!



Pandemonium in government school: Vomiting, fainting among students due to nutritional pills

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் இயங்கிவரும் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பள்ளி மாணவிகளுக்கு வழக்கம் போல் ஊட்டச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஊட்டச் சத்து மாத்திரையை சாப்பிட்ட மாணவிகளுக்கு, அடுத்த சில மணி நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர்.இதன் பின்னர் சம்பவ இடத்திற்க வந்த 108 ஆம்புலன்சுகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதற்கிடையே தற்போது வரையில் 50 க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்து மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் பதறியடித்து கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர். இதனால் ஆத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.