மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படிக்க வற்புறுத்தியதால் மாணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு.. கதறும் பெற்றோர்!
திருவள்ளூர் அருகே இளைஞர் ஒருவரை கல்லூரிக்கு செல்ல வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட சரத் கண்டிகை பெஹனாயம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஜினி. கட்டிடத் தொழிலாளி ஆன இவருக்கு 18 வயதில் சக்திவேல் என்ற மகன் உள்ளார். இவர் பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு சக்திவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் சக்திவேலுக்கு கல்லூரியில் படிக்க விருப்பமில்லை எனவும் வேலைக்கு செல்ல விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர் படிக்க வற்புறுத்தியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.