மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெள்ளப்பெருக்கால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட ரயில்.! சிக்கிக் கொண்ட 1000 பயணிகளின் நிலை என்ன??
குமரி அருகே வங்கக் கடலில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக பேய் மழை பொழிந்து வருகிறது. வரலாறு காணாத இந்த பெரும் மழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டவாளங்களும் நீரில் மூழ்கியுள்ளதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பயணிகளுடன் திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட ரயில் வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று முதற்கட்டமாக ரயிலில் இருந்த 300 பயணிகள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். இந்த நிலையில் வழியில் உள்ள சாலை உடைந்ததால் மீதமுள்ள 500 பயணிகளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு குடிநீர் மற்றும் உணவு உள்ளிட்ட தேவையான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ரயிலில் சிக்கியுள்ள பயணிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநில, மத்திய அரசுகள் ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து ரயிலில் சிக்கியிருக்கும் பயணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று மீட்கப்பட்டு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.