ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி.! முதலமைச்சர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு.!
கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகள், திரையரங்குகள், பூங்காக்கள் போன்றவை கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களின் நலனுக்காக சில தளர்வுகள் அளிக்கப்பட்டு திரையரங்குகள், பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.
ஆனாலும், சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இந்தநிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 30.11.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், டிசம்பர் 14ஆம் தேதி முதல் சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுலாத்தலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.