மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களே உஷார்.. தக்காளி சாதத்தில் கிடந்த ஸ்டாப்ளர் பின்.. கேள்வி கேட்ட வாடிக்கையாளரை தாக்கிய ஹோட்டல் உரிமையாளர்..!
திருவாரூரில் இயங்கி வரும் ஹோட்டல்களில் ஒன்று ஸ்ரீ கணேஷ் ஹோட்டல். இந்த ஹோட்டலில் சம்பவத்தன்று மகாலட்சுமி என்பவர் தனது மகன் சந்தோஷிற்கு தக்காளி சாதம் ஒரு பார்சல் வாங்கி கொடுத்துள்ளார்.
இதனையடுத்து சந்தோஷ் ஹோட்டலில் வாங்கிய பார்சலை பிரித்து சாப்பிடும் போது அதில் ஸ்டேப்ளர் பின் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் சந்தோஷ் ஸ்டேப்ளர் பின் பார்சலுடன் இருந்த தக்காளி சாதத்தை எடுத்துக்கொண்டு சென்று ஹோட்டல் உரிமையாளரிடம் இதனைப் பற்றி கேட்டுள்ளார்.
அதற்கு ஹோட்டல் உரிமையாளர் தங்கள் கடையில் ஸ்டேபிளர் பயன்படுத்துவதில்லை என்று கூறி சந்தோஷ் கையில் இருந்த உணவுப் பொட்டலத்தை பறித்து குப்பைத் தொட்டியில் வீசி உள்ளார். மேலும் சந்தோஷை தரைக்குறைவாக பேசி தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் சந்தோஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சந்தோஷ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.