மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களே எச்சரிக்கை! மின்னல் தாக்கி செல்போனில் பேசி கொண்டிருந்த வாலிபர் பலி..!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பல்லவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் குமளூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
சமீபகாலமாக தமிழகம் எங்கும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேபோன்று திருச்சி லால்குடி பகுதியில் பலத்த இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனையடுத்து வீட்டிலிருந்த ஜெயக்குமார் ப்ளூடூத் மூலமாக தனது நண்பருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று ஜெய்குமார் மீது மின்னல் தாக்கி அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெய்குமாரின் பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அங்கு ஜெய்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மின்னல் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.